தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பாக முதல்வர் தலைமையில், அவசர சட்டத்தை இயற்றி , ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் அன்றே பரிசீலனை செய்தார்.
இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை தடை விதிப்பது குறித்து இயற்றி அனுப்பிய அவசர சட்ட மசோதாவை, நிரந்தர சட்ட மசோதாவாக மாற்ற தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி நிரந்தர சட்ட மசோதா குறித்து அதாவது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடித்ததில் இருந்த விளக்கங்களுக்கு பதில் அளித்து தமிழக அரசு 24 மணி நேரத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுக எம்.பி.ஆன கனிமொழி இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, ஆளுநர் பதவியே தேவையில்லாதது தான், அது காலவதியான ஒன்றும் தான் என்றுள்ளார். இதற்கடுத்து தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க கோரி இயற்றி அனுப்பிய மசோதாவிற்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் தவறி வந்த நிலையில் இன்று அந்த மசோதா காலாவதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய கனிமொழி ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.