27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsTamilnadu

பாம்பன் பால பணிகள் குறித்து விளக்கம்

புதிய பாம்பன் பாலப் பணிகள் 2023 மார்ச் மாதம் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே புதிய ரயில்வே பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து 2.05 கிமீ தூரத்திற்கு ரூபாய் 535 கோடி செலவில் ரயில்வே துறையின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 84 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், புதிய பாலத்திற்காக கடலில் 101 தூண்கள் நிறுவப்பட்டுள்ளதில் 99 தூண்களில் இணைப்பு கிர்டர்கள் அமைக்க வேண்டிய நிலையில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணிகளானது நடைபெற்று வருகிறது.

கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கிர்டர் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த மின்தூக்கி கிர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், இந்த புதிய பாலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts