சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக இன்று முதலமைச்சர் பினராயி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
சபரிமலையில் கூட்டம் அதிகரித்துள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்திற்கு முதல்வர் பிரனாய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று சட்டசபை வளாகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் தரிசன நேரத்தை நீட்டிப்பது, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு 85, 000 பக்தர்கள் வரை வருகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற காவல்துறை அறிக்கை குறித்தும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் ஏற்பாடுகள் செய்வது உள்ளிட்டவைகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது