27.7 C
Tamil Nadu
28 May, 2023
Crime

காவல் நிலையம் அருகே வாலிபர் வெட்டி கொலை – பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்

murder-image

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை வியாசர்பாடி கன்னிகா புரத்தை சேர்ந்தவர் விவேக், தற்போது அயனாவரத்தில் தனது மனைவி தேவப்ப்ரியா ஒன்னறை வயது கைகுழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.விவேக் சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள எழும்பூர் நெடுஞ்சாலையில் தனியார் தகவல் தொழில்நுட்ப (ஹாத்வே இண்டர்நெட் )நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்

இவரது மனைவி தேவப்பிரியா சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் இன்று காலை தேவ பிரியாவை அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு எழும்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அவரது நிறுவனத்திற்கு வழக்கம் போல் வேலைக்கு வந்துள்ளார்.

விவேக்கிற்கும் அதே நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷிற்கும் வேலை விஷயத்தில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் சந்தோஷ் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் ஏற்கனவே விவேக்கிற்கும் சந்தோஷிற்கும் பிரச்சனை இருந்ததால் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது சந்தோஷை விவேக் அதிக வேலை வாங்கி வந்துள்ளார் கோபமடைந்த சந்தோஷ் விவேக்கை பழி தீர்க்க தக்க சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

See also  திருப்பரங்குன்றம் கோவிலில் ரூ. 37.50 லட்சம் உண்டியல் வசூல்

இன்று காலை அலுவலகத்திற்கு வந்த விவேக்கை சந்தோஷ் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெடியுள்ளார் மேலும் விவேக் உடன் இருந்த சகஊழியரான அருணையும் சந்தோஷ் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விவேக் உயிரிழந்தார். அருண் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சந்தோஷ் மாடியில் ஏறி கட்டிடம் விட்டு கட்டிடம் ஏறி குதித்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தை அடுத்து சம்பவ இட்த்திற்கு வந்து விவேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக் படுகொலை நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட போது அருகில் இருந்த கட்டிடத்தில் சந்தோஷ் மறைந்திருந்ததை துணை ஆணையர் சேகர் தேஷ்முக் கண்டுபிடித்தார் உடனடியாக காவலர்களை அனுப்பி சந்தோஷை கைது செய்தனர்

See also  பிக்பாஸ் சீசன் 6 :- நாமினேஷன் free zone-ஐ நழுவவிட்ட தனலட்சுமி! இன்றைய ப்ரோமோ..!

படுகொலை செய்யப்பட்ட விவேக் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்எல்பி சட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் பணிபுரிந்த நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக இருந்த விவேக்கிற்கும் ஒப்பந்த தொழிலாளியாக இருந்த விவேக்கிற்கும் வேலை செய்வதில் மோதல் இருந்து வந்துள்ளது ஏற்கனவே சந்தோஷ் கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

Related posts