தாம்பரம் அருகே பிரபல நகை கடையில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயுள்ளன
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கௌரிவாக்கம் பகுதியில் ப்ளூஸ் ஸ்டோன் என்ற பிரபல நகை கடை இயங்கி வருகின்றது
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு நகைக்கடை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 5 மணி அளவில் கடை உரிமையாளர் செல்போனுக்கு எச்சரிக்கை அலாரம் அடித்திருக்கிறது.
உடனே கடைக்கு வந்து ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் உள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்தபோது கடையில இருந்த லிப்ட் வழியாக கொள்ளையன் கடைக்குள் இறங்கி உள்ளே வந்து நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது
மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் கொள்ளை சம்பவம் அரங்கேற்றிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.