26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
Crime

அரிய வகை அல்ஃப்ரா ஜோலாம் போதை போதை பொருள் – விற்பனை செய்த இரண்டு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை…

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு அடிப்படையில் அந்தந்த சரகத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக போதைப் பொருள் வைத்திருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களிடம் இருக்கக்கூடிய போதைப்பொருள் மற்றும் போதைப் பொருள் விற்ப்பனைக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ராஜமங்கலம் காவல் நிலையம் சரக்கத்துக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது கொளத்தூர் கங்கா திரையரங்கம் அருகே இருந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

அவர்களை போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர.
இது தொடர்பாக போலீசார் அவர்களுடைய இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் அல்ப்ராஜோலம் என்கிற 230 கிராம் போதை பொருள் இருந்துள்ளது. அதனுடைய மதிப்பு 2.5 லட்சம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

See also  ஆசை ஆசையாய் காதலித்த பெண் 51, லட்சம் அபேஸ் ?

மேலும் போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் கொளத்தூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் கிஷோர் என தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஏற்கனவே இரண்டு அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts