சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சில நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 2,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருபுறம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியிலும் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை மெற்கொண்டுள்ளார்.
சீனாவில் பரவும் கொரோனா தொற்றின் வகை ஏற்கனவே இந்தியாவில் பரவியது என்பதால் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை தொடர்பான முக்கிய முடிவுகள் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளன.