26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
Covid

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கியது

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை ரோண்டம் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டுகிறது. மேலும் சென்னை விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப சோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது தென்பட்டால் மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல அம்புலன்ஸ் வச்தி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விவரங்கள் தமிழக அரசு சார்பில் முழுமையாக சேகரிக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

See also  பொன்னியின் செல்வனின் புதிய அறிவிப்பு நாளை வெளியாகும் - படக்குழு திடீர் தெரிவிப்பு!!

Related posts