பெங்களூரை சேர்ந்த பள்ளிகளில் மாணவ , மாணவியர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன் எடுத்து வருவதாக நடத்தப்பட்ட சோதனையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் செல்போன்களை எடுத்துவருவதாக தொடர்ந்து எழப்பட்ட புகார்களின் அடிப்படையில், கர்நாடகவை சேர்ந்த ஆரம்ப மேல்நிலைப் பள்ளிகளின் மேனஜ்மெண்ட்ஸ் அதாவது KAMS பள்ளி மாணவர்கள் எடுத்து வரும் புத்தகப் பைகளை சோதனையிட உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த பல பள்ளிகளில் செல்போன் எடுத்து வருவதை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் செல்போன் இருக்கிறதா என ஆசிரியர்கள் சோதனையிட்ட பொழுது புத்தகப் பைகளில் செல்போன் தவிர ஆணுறை, கர்ப்பத்தடை மாத்திரைகள் , லைட்டர்கள், மற்றும் சிகரெட் போன்றவைகளை கண்டெடுத்துள்ளனர்.
இச்சோதனை மொத்தம் 80 சதவீத பள்ளிகளில் தொடரப்பட்டது, இதில் மாணவர் ஒருவர் இடமிருந்து வாய்வழி கருத்தடை மாத்திரையும், 10 ஆம் வகுப்பு மாணவியின் பையில் ஆணுறையையும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த பொழுது நண்பர்களை கைகாட்டி மாற்றி பேசுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் அதிர்ச்சியை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சந்திப்பு நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் குறித்து ஆசியர்கள் கூறுவதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து , மாணவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு வைப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன்கள் எடுத்து வருவதே தவறு, அதனை சோதனையிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டால் மாணவர்களின் பைகளில் இருக்க கூடாத பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட பள்ளியை சேர்ந்த மாணவர்கள், சில நாட்களாக ஆசிரியர்கள் மீது தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ஐந்தாம் வகுப்பு குழந்தைகளும் இத்தைகய முறையில் நடந்து கொள்வது வேதனையளிப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.