கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் குறித்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மங்களூரில் அமைந்திருக்கும் வமஞ்ஜூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் பர்தா அணிந்து கொண்டு பாலுவுட் பாடலொன்றுக்கு நடனமாடியுள்ளனர்.
இவர்கள் நால்வரின் நடனத்தை மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த சக மாணவர்கள் பயங்கரமாக வரவேற்று வந்துள்ளனர். மேலும் சிலர் இவர்கள் நடனமாடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியதும் கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த கல்லூரி நிர்வாகம், கல்லூரி விழாவிற்காக அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நடனமாடிய நால்வரும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாணவர்கள். சமூகம் சக மாணவர்களுக்கு தீங்கு விளைவிப்பதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு கல்லூரி நிர்வாகம் ஒருபொழுதும் ஆதரவு அளிக்காது எனவும் தெரிவித்துள்ளது.