27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsPolitical

ஆன்லைன் ரம்மியில் உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்வர் பொறுபேற்க வேண்டும் – அண்ணாமலை ட்வீட்..!

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பல வகைகளில் முயற்சித்து வருகிறது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடைசெய்யக்கோரி அவசர மசோதா இயற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அவசர மசோதா நிரந்தர மசோதாவாக மாற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பிய பொழுது , அதற்கு விவரங்கள் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிக்காமல் இருந்து வந்ததால் , ஆன்லைன் தடைச்சட்டம் மசோதா இறுதியில் காலாவதியாகிவிட்டது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசினுடைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை, அரசாணை பிறக்கப்படமால் அவசர சட்டம் இயற்றுவதில் என்ன பயன் இருக்கிறது என்ற கேள்வியை பாஜக அன்றே முன்வைத்தது, அதனை தற்போது நினைவூட்ட விரும்புகிறோம். ஆளும் அரசு அவர்களுடைய திறனற்ற தன்மைகளை மறைப்பதற்காக , தமிழக ஆளுநரின் மீது பல பொய்களை அடுக்கி அடுக்கி வருகிறது.

இப்படி நடந்து கொள்வதற்கு திமுகவினர் வெட்கி தலை குணிய வேண்டும். இதனை தொடர்ந்து தமிழக அரசின் மெத்தன போக்கின் காரணமாக இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் எட்டு உயிர்கள் பறி போகியுள்ளது. இதற்கெல்லாம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அண்ணாமலையின் ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts