குஜராத்தில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் வெற்றியை பதிவு செய்யப்போகிறது ஆளும் கட்சியான பாஜக.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துகணிப்புகள் என அனைத்துமே ஆளும் மத்திய அரசான பாஜகவே பெரும்பான்மை இடத்தை தக்க வைக்குமென தெரிவித்திருந்தன.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை குஜராத்தை பொறுத்தவரை பாஜகவே முன்னிலையில் இருக்கிறது.
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை மாநிலத்தில் பதிவு செய்யப்போகிறது.
92 இடங்களை பிடித்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் 10 மணி நேர நிலவரப்படி, 150 இடங்களுக்கும் மேல் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது
ஏறக்குறைய பாஜவின் வெற்றி உறுதியாகி விட்டது என்றுதான் கூற வேண்டும்.