நடிகை காயத்ரி ரகுராம் பாஜக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பாஜக இன்று அறிவித்திருந்தது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டு வருவது சமூக வலைத்தளங்களில் விரலாகி வருகிறது.
அவர் வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது, பா.ஜ.க பெண்களை அவமானப் படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.
இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும். என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், என பதிவிட்டிருப்பது வைரலாக்கப்பட்டு வருகிறது.