தேசிய அணியின் தேர்வு குழுவின் அனைவரையும் நீக்கி புதிய உறுப்பினர்களை இணைக்க விண்ணப்பிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், இதற்காக புதிய தேர்வு குழு உறுப்பினராக பதிவு செய்பவர் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
5 வருடங்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்ற நபராக இருக்க வேண்டும். அதே சமயம் 5 வருடங்கள் தேசிய அணிக்காக விளையாடி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தை வரும் நவம்பர் 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.