மண்டல பூஜைக்கு 6நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கார்த்திகை மாத துவக்கத்திலிருந்தே சபரிமலைக்கு கூட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் மண்டல பூஜையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கேரளாவில் குவிந்து வருகின்றனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களை வழியில் தடுத்து நிறுத்தி கூட்ட நெரிசலை போலீசார் தவிர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 33 நாடகளில் மட்டும்சபரிமலை கோயிலில் 21,70,548 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நேற்று மட்டும் 89925 பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் 83687 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தரிசனத்திற்காக இன்று 89933 பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.