வங்கக்கடலில் உருவாகி வரும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு நேரத்தின் பொழுது புதுச்சேரி மற்றும் ட்ரிஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்தை கடக்க இருப்பதாக வானிலை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தீவிர புயலாகவே வலுப்பெற்று புயல் கரையை கடக்கும் எனவும், இதனை தொடர்ந்து புயல் கரையை கடந்த பிறகும் மாலை நேரத்திலும் வலுப்பெற்று நிற்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 520 கி.மீ தூரத்தில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை அறிக்கை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தற்காலிக விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புயல் காரணமாக மட்டுமே தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த நிர்வாகம் , புயல் கரையை கடந்ததும் தேர்வுக்கான தேதிகள் முடிவுசெய்யப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது.