தமிழ்நாட்டில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் , ஆளும் திமுக அரசுக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் , மோதல்களும் நிலவி வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை இன்று சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் , பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநரை திடீரென சந்தித்து அரசியல் விவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவ்வப்போது தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும் , துணை ராணுவ படை வீரர் குருமூர்த்தியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் ஆளுநரிடம் அண்ணாமலை கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை தொடர்பான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் ஆன்லைன் ரம்மி தடை விதிப்பது குறித்து அரசாணையே பிறப்பிக்கப்படவில்லை. இதெற்கெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் , சிலர் அவர் தாமதம் செய்ததால் தான் மசோதாவே காலவதியாகிவிட்டதாவும் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் சரியான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவது தான் ஆளுநரின் பணி.
இதனை தொடர்ந்து பேசிய அவர், செஸ் ஒலிம்பியாக் போட்டி சென்னையில் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், துவக்க விழாவிற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகைத்தந்தார். இருப்பினும் தமிழக அரசு அவருக்கான உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. இதிலிருந்து, என்னத்தெரிகிறது நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத சமயத்தில், நாட்டு மக்களின் நிலை என்ன? என்ற கேள்வியையும் ஆளுநரிடம் முன்வைத்துள்ளோம், மேலும் பிரதமர் வருகையின் பொழுது குறைந்த பாதுகாப்பிற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.