கடந்த வாரமாக புயல் , மழை என இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் , மக்களுக்கு எவ்வித அசாம்பவிதமும் நிகழாதிருக்கும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்தி வந்தது.
மாண்டஸ் புயலின் காரணமாக மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் , உயிரிழப்பும் , பொருள் இழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. இதெற்கெல்லாம் காரணமாக இருந்த தமிழக அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாரட்டுகள் என அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மாண்டஸ் புயலின் கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர குடியிருப்பு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் சீற்றத்தால் மீனவர்களின் படகுகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன மற்றும் கடல் அரிப்பு காரணமாக சிலர் வீடுகளை இழந்தும் உள்ளனர். மீனவர்களின் சேதமடைந்த நிலையில் இருக்கும் படகுகளை சரிசெய்ய வேண்டுமெனில் பல லட்சக்கணக்கான மதிப்பில் பணம் தேவைப்படும். அதுமட்டுமல்லாது மீனவர்களின் மீன்பிடி வலைகளும் சேதமடைந்து இருப்பதால் அவர்களால் அதனை வைத்து மீன்பிடிக்க கூட செல்ல முடியாத அளவிற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்து வருகின்றனர்.
எனவே தமிழக அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, கொடுத்து மீனவர்களுக்கு புதிய வலைகளையும் , புயல் காரணமாக கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளையும் தமிழக அரசே அவர்களது செலவில் கட்டித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன் – என்றும் பதிவிட்டிருக்கிறார்.