அதிமுக இடையே ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பல பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. தற்போதைய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் , கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கழக செய்தித் தொடர்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தெற்கு ஒன்றிய துணை செயலாளர் ஆன உச்சிமாகாளியிடம் ரூபாய் 1 லட்சம் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுக தலைமை செயலக அலுவலகத்தில் வைத்தே இத்தகைய திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பணம் திருடப்பட்டது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.