திமுக-வின் முன்னாள் அமைச்சராக இருந்து , தற்போது நீலகிரி நாடாளுமன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டு வரும் ஆ.ராசா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு முன்னதாக சிபிஐ ஆ.ராசா மீது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவங்களுக்கு இழப்பு செய்திருப்பதாக வழக்கு போடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிபிஐ அளவுக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக , தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சொந்தமான பல இடங்களில் , சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் வருமானத்தை தாண்டி 5.53 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்து ஆ.ராசா மீது கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐயின் சோதனைகளுக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது திமுக முன்னாள் எம்.பி ஆ.ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஆ.ராசா உட்பட மூன்று பேர் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.