27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsTamilnadu

மாநகர பேருந்து மீது மோதிய ராட்சத கிரேன்

சென்னையில் மெட்ரோ ரயில் பணியின் போது ராட்சத கிரேனை அதன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் மாநகர பேருந்து ஓட்டுநர் லேசான காயங்களோடு தப்பினார்.

சென்னை வடபழனி – ஆற்காட் சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் பணியானது நடைபெற்று வருகிறது.

இன்று காலை 5.15 மணியளவில் ரத்னா ஸ்டோர் அருகே ராட்சத கிரேன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டும் பணியானது நடந்து வந்தது.

அப்போது திடீரென ராட்சத கிரேன் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்ற 159a எண் கொண்ட மாநகர பேருந்தின் மீது மோதியதில்,பேருந்தின் முன்பகுதி மற்றும் இடதுபுறம் முழுவதுமாக சேதமடைந்தது.

பயணிகள் இல்லாமல் சென்ற பேருந்து என்பதால் எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறவில்லை.

ஆனால் இவ்விபத்தில் பேருந்தை ஓட்டுநர் பழனி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வடபழனி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த பேருந்தை அப்புறப்படுத்தினர்.

பின்னர் இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டரான வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திய போது, தூக்க கலக்கத்தில் கிரேனை ஆப்ரேட் செய்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

மேலும், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts