27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsWeather

சூறாவளி புயலாக மாறி கரையை கடக்க உள்ள காற்றழுத்த தாழ்வு

சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டு உள்ளது.

திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே சுமார் 470 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து (இலங்கை) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கி.மீ., காரைக்காலில் இருந்து 670 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

See also  விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரம் மேலும் படிப்படியாக இன்று மாலை சூறாவளி புயலாக மாறி டிசம்பர் 08 காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts