சமீப நாட்களாக நகைச்சுவை நடிகரான யோகி பாபுவின் பெயர் சர்ச்சையில் சிக்கி அடிபட்டு வருகிறது. இதற்கெல்லாம் பின் ஒரு நடிகர் மறைமுகமாக வேலை பார்த்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யோகிபாபு ஆரம்ப காலத்தில் பல படங்களில் கூட்டத்தில் ஒருத்தனாக நடித்திருந்தாலும், இன்று அவர் மட்டுமே படமெடுத்தாலும் ஓடும் என்ற அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை பிடித்துவைத்திருக்கிறார் . இதனிடையெ யோகிபாபு நடித்திருந்து வெளியான திரைப்படம் மண்டேலா, பல விருதுகளை வென்று அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.
நடிகர் யோகிபாபு பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது நடிகர் வடிவேலு சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். யோகிபாபு நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால் , தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுக்கும், ஏற்கனவே வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் மார்கெட் குறைந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், சில நடிகர்கள் யோகிபாபுவின் மார்க்கெட்டை குறைக்க திட்டமிட்டு வந்துள்ளனர்.
இதனிடையே , 5 வருடங்கள் கழித்து ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர் வடிவேலு , யோகிபாபுவால் அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் அவர் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்ததும் படங்கள் வாய்ப்பு குவியும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், எல்லா பட வாய்ப்பும் யோகிபாபுவிற்கு செல்வதால் அதனை கெடுக்க வடிவேலு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், சமீபத்தில் நடைபெற்ற தாதா படத்தின் விழாவில் நடிகர் யோகிபாபு இப்படத்தில் நான்கு சீனில் மட்டும் தான் நடித்துள்ளேன் எனக்கூறி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் அவர் படம் முழுவதும் அடிக்கடி வரும் அளவிற்கு தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கு. ஏன் நான்கே காட்சி மட்டும் என்கிறார் எனத்தெரியவில்லை என்றார்.
இதனை தொடர்ந்து அவர் மேல் பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு வந்தது. இதெற்கெல்லாம் பின்னாடி நடிகர் வடிவேலுவின் சதிதிட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.