26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

குழந்தைகளுக்கு பெயர் வைத்த விக்னேஷ்சிவன் – நயன்தாரா!

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதன் முதலாக போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குநரகா அறிமுகமானவர் தான் விக்னேஷ் ஷிவன். அத்திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரௌடி தான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது.

மேலும் இத்திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக நடிகை நயன்தாராவுடன் காதலில் விழுந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதனைத்தொடர்ந்து இவர்களின் காதல் விவகாரம் தான் சமூக வலைத்தளத்தை பரப்பரப்பில் வைத்து வந்தது. இதற்கடுத்து இவர்களின் காதல் 8 வருடங்களாக நீடித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து நயன் மற்றும் விக்கி இருவரும் திருமணமான நான்கு மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்ததும், பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதுகுறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தரப்பில் இருந்து, நாங்கள் இருவரும் 5 வருடங்களுக்கு முன்னதாகவே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அதனடிப்படையில் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்தோம் என தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் ஷிவன் அடிக்கடி தனது குழந்தைகளோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உயிர் & உலகம் என வெளிப்படுத்துவது உண்டு.

மேலும் நயன் விக்கி இருவரும் தங்களது குழந்தைகளின் முகங்களை சமூக வலைத்தளப்பக்கங்களில் காட்டமலே இருந்து வந்தனர். சமீபத்தில் இருவரும் துபாய் விமான நிலையத்தில் குழந்தைகளோடு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் வைரலாகி வந்தது. அவ்வப்போதும் நயன் மற்றும் விக்கி இருவரும் சாதுரியமாக தங்கள் குழந்தைகளின் முகங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது என மறைத்து எடுத்து சென்றனர்.

இதனிடையே இன்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளப்பக்கத்தில் தங்களது குழந்தைகள் குறித்த மற்றுமொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவை என்னவென்றால் நயன் விக்கி தம்பதி இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு வைத்த பெயரை அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதில் நயன் மற்றும் விக்கி இருவரும் தங்கள் குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, விக்கி எங்கள் குழந்தைகளுக்கு பெயரிட்டுள்ளோம், உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்வீக் N சிவன் என பெயரிட்டு இருப்பதாகவும், அதில் N என்பது உலகத்தின் சிறந்த தாயான நயனை குறிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நயன்தாரா சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தங்கள் குழந்தைகள் பெயர் குறித்து ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை பெற்று வருகிறது.

See also  விஜய்யின் லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை!

Related posts