நடிகர் விஜய் இன்று இரண்டாவது முறையாக தனது ரசிகர்களை சந்திக்கிறார்
பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினி தனது படம் ரிலீசுக்கு முன்பாக ரசிகர்களை சந்திப்பது வழக்கமாக வைத்திருந்தார்.
அவரின் ரசிகர்களுடனான சந்திப்பு படம் நன்றாக ஓடுவதற்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்கும் ஒரு காரணமாக அமையும் என்பது அவரின் நம்பிக்கை என்னவோ?.
சம்பந்தப்பட்ட படம் ரிலீஸ் ஆகும் வரை ரஜினி தனது இருப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்பார்
ஆனால் தனது அரசியல் குறித்த அறிவிப்பிற்கு பின் சந்திப்புகள் குறைந்து விட்டன
தற்போது அதே பாணியை நடிகர் விஜயின் பின்பற்றுகிறாரா என பலரும் பேச தொடங்கியுள்ளனர்.
நடிகர் விஜய்-யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்.
கடந்த மாதம் 20 ஆம் தேதி நடிகர் விஜய் தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில், இன்று அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை இன்று பனையூர் அலுவலகத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ள உள்ளார்.
தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் சந்திக்க உள்ளார்.நா.