பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார்.
வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த பொங்கலுக்கு வெளியிடப்பட்டது, மேலும் இத்திரைப்படம் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்துக்கு போட்டியாக வெளியிடப்பட்டது. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார், மேலும் நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர், அதில் நடிகர் சரத்குமார், நடிகர் பிரபு, குஷ்பு, ஷாம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.300 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு சமீபத்தில அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் இத்திரைப்படம் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.ஒருபுறம் அஜித் ரசிகர்கள் துணிவு எனவும் மறுபுறம் விஜய் ரசிகர்கள் வாரிசு எனவும் பெரிய கலவரமே நிகழ்ந்தது. ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கையில் வாரிசு திரைப்படம் இன்றளவும் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் வாரிசு படக்குழு தற்போது வெளியிட்டிருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் கடும் வைரலாக்கப்பட்டு வருகிறது. வாரிசு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி போஸ்டர் வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். துணிவு திரைப்படத்துக்கு போட்டியாக வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் அதிக அளவிலான #50daysofvarisu என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.