நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் , அஜித் நடிப்பில் துணிபு திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
துணிவு திரைப்படத்தை போனிகபூரும் , வாரிசு திரைப்படத்தை தில் ராஜூவும் தயாரித்திருக்கின்றனர். இரு படங்களும் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் யார் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முதலிடத்தை தட்டி செல்லும் என ஆரவாரமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே துணிவு திரைப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வாங்கி இருந்தது. துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் சரிசமமாக திரையரங்குகளில் திரையிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனிடையே தற்போது வாரிசு படத்தின் திரையரங்கு உரிமையையும் ரெட் ஜெயின்ட் நிறுவனமே வாங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய நகரங்களான சென்னை, செங்கல்பட்டு கோவை ஆற்காடு உள்ளிட்ட 4 இடங்களில் வாரிசு திரைப்படத்தை திரையிடும் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் பெற்றுள்ளது.