27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

3- வது வாரத்திலும் ஹவுஸ்புல் – 300 கோடி வசூல்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு. இத்திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாரிசு திரைப்படம் , இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த துணிவு திரைப்படத்தோடு வெளியானது. ரசிகர்களின் உச்சகட்ட வரவேற்புக்கு மத்தியில் வெளியான இரு திரைப்படங்களும் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வாரிசு திரைப்படம் மக்களிடையே குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறி நாளுக்கு நாள் வசூலை குவித்து வருகிறது.

வாரிசு திரைப்படம் வெளியாகி 16 நாட்கள் ஆகியும் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இதனிடையே திருச்சி மரியம் திரையரங்கில் இதுவரை விக்ரம் படத்திற்கு தான் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை (footfall) தந்தனர் என்கிற சாதனை இருந்து வந்தது. அதை வாரிசு திரைப்படம் முறியடித்து தற்போது அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

See also  ஜவான் திரைப்படத்தின் கேமியோ ரோலில் நடிக்க மறுத்த விஜய்!

அதேபோல திருநின்றவூர் வேலா சினிமாஸ், அறந்தாங்கி விஎஸ் திரையரங்கம் ஆகியவற்றிலும் வாரிசு படத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ஈரோடு பள்ளிபாளையம் ஜெயலட்சுமி சினிமாஸ் திரையரங்கிலும் மூன்றாவது வாரத்தில் வாரிசு திரைப்படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் இருந்து வருகிறது.

படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் 193.94 கோடியும் வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக 275.69 கோடியும் வசூலித்துள்ளதாக வர்த்தக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் வாரிசு படத்தின் வசூல் 300 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts