பாவா தயாரிப்பில் உருவாகும் உப்பு காத்து திரைப்படம் திருவண்ணாமலையில் பூஜையுடன் இன்று தொடங்கியது.
பாவா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உப்புக் காத்து எனும் திரைப்படத்தின் பூஜை திருவண்ணாமலை துர்கை அம்மன் கோவிலில் நடைபெற்றது. நாடகத்துறையை சேர்ந்த கோவி.செல்வராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
பெங்களுரு V.S.கிருஷ்ணாஜி சுவாமிகள் நல்லாசியுடன் அறந்தை பாவா தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமீம் அன்சாரி இசை அமைக்கிறார். இதர தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
படத்திற்கான கலைஞர்கள் தேர்வு செய்த பின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்பு காத்து படம் மற்ற படங்கள் போன்று இல்லாமல் வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என பட குழு தெரிவித்துள்ளது.