27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

த்ரிஷாவை நக்கலடித்த கார்த்தியின் டிவிட்டர் பதிவு வைரல்!…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பண்டைய காலத்து உண்மைக் கதையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் பொன்னியின் செல்வன் நாவல். இவை மொத்தம் ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

கல்கி எழுதிய நாவலைத் தழுவி தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க வேண்டுமென பல நடிகர்கள் முயற்சித்தும் வந்தனர். இதனிடையே இத்திரைப்படத்தின் இறுதி கட்ட வாய்ப்பு இயக்குனர் மணிரத்தினத்திடம் சென்றது. கிட்டத்தட்ட இக்கைதையை படமாக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் நீண்ட காலத்து கனவு என்றே சொல்லலாம்.

இதனை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டது தான் பொன்னியின் செல்வன். மேலும் இதற்காக இயக்குனர் மணிரத்னம் கதாபாத்திர தேர்வுகளை பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார். இதில் நடிகை திரிஷா, கார்த்தி , விக்ரம் , ஜெயம் ரவி , பார்த்திபன் , சரத்குமார், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் இணைந்து நடித்திருக்கின்றனர்.

See also  முதல் நாள் வசூலிலேயே வாரிசை மிஞ்சியது துணிவு! - ரசிகர்கள் கொண்டாட்டம்!

சோழர் காலத்து கதை என்பதால் மக்களுக்கு இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகங்கள் கொண்டிருக்கும் நிலையில் இதனை மணிரத்னம் இரண்டு பாகத்தில் படமாக எடுத்து முடித்துள்ளார். இருப்பினும் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வந்தது.

மேலும் இவர் எடுத்த இரண்டு பாகத்தில் முதலாம் பாகம் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை காண திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 90 நாட்களுக்குள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து தற்போது பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனவும்., படத்துக்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் தற்போது பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவன் , குந்தவை பிராட்டி இருவருக்கும் இடையே ஓர் பாடல் , அக நக முக நக இடம் பெற்றுள்ளது.

See also  நாக சைதான்யாவின் அடுத்த அப்டேட் இணையத்தில் வைரல்!..

மேலும் இப்பாடல் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலேயே குந்தவையும் வந்தியத்தேவனும் முதன் முதலாக சந்தித்துக் கொள்ளும் பொழுது சிறிய பகுதியாக இடம்பெறும். தற்போது இருவருக்குமான அப்பாடல் இரண்டாம் பாகத்தில் முழுவதுமாக இருப்பதாகவும் அப்பாடலை இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட இருப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குந்தைவை பிராட்டி திரிஷாவுக்கு, வந்தியத்தேவன் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலையபிராட்டி hi,  என்ன பதிலே இல்லை என கார்த்தி பதிவிட அதற்கு பதிலளித்து திரிஷா என்ன வாணர்குல இளவரசே என பதிவிட்டுள்ளார். இதற்கு கார்த்தி மீண்டும் , இலையபிராட்டியின் தரிசனம் கிடைக்குமா என்ன நக்கலடித்து மீண்டும் ஓர் பதிவிட்டுள்ளார், இதற்கு நடிகை திரிஷா ம்ம்ம் கூடிய விரைவில் என பதிலளித்தது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே பொன்னியின் செல்வனின் முதல் பாகத்திற்கு இருந்தே எதிர்பார்ப்பை போலவே மக்களிடையே இரண்டாம் பாகத்திற்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Related posts