பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய நாள் முதல் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி முதலில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது 8 பேர் எவிக்ஷனில் வெளியேறியுள்ளார்கள் , மீதம் 13 பேர் மட்டுமே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். இதில் சுவாரஸ்யமாக டபுள் எவிக்ஷன் இருப்பதால் மக்கள் அனைவரும் கமலின் எபிசோடுகளுக்காக ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த வார டபுள் எவிக்ஷனில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வார கமல் வரும் எபிசோடுகளின் ப்ரோமோ வெளியாகி மக்களின் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நடிகர் கமல் இவங்க எத்தனை வேஷம் போட்டாலும் நல்ல மழை பொழியும் சமயத்தில் உண்மையான முகம் வெளிவரும். இவங்க அதுக்கும் ஒரு வேஷம் போட்டு இருக்காங்க, ஆனா அவங்க எத்துன வேஷம் போட்டாலும் உண்மையான முகம் பிதுங்கிட்டு வெளில வந்தே தீரும் என கமல் பேசியிருக்கும் காட்சி ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும்,, என்னதான் எனக்கு இவங்கள புடிக்கும் , அவங்கள புடிக்கும் என ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் செஞ்சிகிட்டாலும், இந்த டபுள் எவிக்ஷன் ல எல்லாமே மாறிடும் எனவும் தெரிவித்துள்ளார்.