இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில் திரையுலகை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலான மக்கள் இவரை தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் அடிப்படையில் அடையாளம் கண்டு கொள்வார்கள், அதுபோன்று இவர் தமிழில் பல முக்கிய நடிகர்களோடு நடித்துள்ளார், அதில் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் என்றால் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் நடித்திருந்தது தான். அக்கதாபாத்திரத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது.
அதன் பின் பல படங்களில் நடித்தார், அக்காலத்தில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற முக்கிய படங்களை இயக்கியும் உள்ளார், அதனோடு குருதிப்புனல், முகவரி , ராஜாபாட்டை , யாரடி நீ மோகினி, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இவர் மறைவு குறித்து வெளிவரும் தகவலானது, சில காலங்களாகவே வயது மூப்பு காரணமாக திரைத்துறைகளில் இருந்து விலகி இருந்ததாகவும் ,இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவர் இயக்குநகராக இயக்கி இருந்த முதல் திரைப்படம் ஆத்ம கவுரவம், இத்திரைப்படத்திற்காக கே.விஸ்வநாத் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி என்ற விருதையும் பெற்றுள்ளார். மேலும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் , பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கே.விஸ்வநாத்தை இந்திய அரசு கவுரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரின் இறப்பு செய்தியை அறிந்து திரையுலகமே சோகத்தில் இருந்து வருகிறது, மேலும் பல்வேறு முக்கிய நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர், இதனிடையே தனது 92 வயதில் இயற்கை எய்திருக்கும் கே.விஸ்வநாத்துக்கு தமிழ் திரையுலகில் இருந்தும் பல்வேறு முக்கிய நடிகர்கள் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.