சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்தை லைகா பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்துக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
இருப்பினும் நெல்சன் கடைசியாக நடிகர் விஜய்யை வைத்து எடுக்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் தோல்வியடைந்ததால் ஜெயிலர் படத்தில் ஏதேனும் குளறுபடி நடந்து விடக்கூடுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் பலரும் இருந்து வருகின்றனர். இருப்பினும் நடிகர் ரஜினி நெல்சனை நம்பி ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது நடிகர் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதனை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கும் இசையை அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எவ்வித முன் அறிவிப்புகளும் இன்றி லைகா நிறுவனம் வெளியிடுவதற்கு காரணமாக இருப்பது, லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரனின் பிறந்தநாளையொட்டி படக்குழு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படத்தை, சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பின்னதாக தலைவர்170 படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்கப்படுவதாகவும் , இதனை அடுத்தாண்டு 2024 – ன் இருத்திக்குள் வெளியிடுவதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூர்யாவை வைத்து உண்மைக்கதையினை படமாக இயக்கவர் நடிகர் ரஜினியை வைத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உதித்து வருகிறது.
இதில் நடிகர் ரஜினி இஸ்லாமியா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிடுவதாக அறிவித்த நிலையில் , பலரும் அஜித்தின் ஏகே62 வாக இருக்கும் என எதிர்பார்த்து காத்து வந்தனர். இதற்கிடையே சற்றும் எதிர்பாராமல் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் தத்தளித்து வருகின்றனர்.