லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கதாநாயகனாக நடிக்க திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது. இத்திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என பெயரிட்டுள்ளனர். மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னதாக இரண்டாவது முறையாக லோகேஷ் மற்றும் விஜய்யின் கூட்டணி உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
தற்போது தளபதி 67 திரைப்படத்தின் படக்குழு படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், படக்குழு குறித்த அறிவிப்புகள் இணையத்தில் கசியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தளபதி 67 கதாபாத்திரம் குறித்த அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சமூக வலைத்தளங்களை அதிரச் செய்தது என்றே சொல்லலாம்.
அதில், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் , அர்ஜூன் , சாண்டி மற்றும் திரிஷா உள்ளிட்ட முக்கிய பல கதாபாத்திரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருந்தது படக்குழு. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து திரிஷாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகர் விஜய், இதையடுத்து ஆக்ஷன் கிங் அர்ஜுனோடு விஜய் இணைந்து நடிக்கும் முதல் படமென்பதால் ரசிகர்களின் கொண்டாடத்திற்கு ஒரு அளவு இருக்காது என்பது மட்டும் உறுதியாகிறது.
இதனை தொடர்ந்து தளபதி 67 – ன் இசை உரிமத்தை சோனியும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சன் தொலைக்காட்சியும் , ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான டைட்டிலை நாளை மாலை 5 மணியளவில் படக்குழு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறி உள்ளது.
previous post