தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் , தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதனிடையே நடிகர் விஜய் சமீப காலமாக தனது ரசிகர்களோடு ஆக்டிவாக இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் நடைபெற்று முடிந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எப்போதும் போன்று இல்லாமல் தனது ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தார், அதுமட்டுமல்லாது நடிகர் விஜய் மேடையில் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளப் பக்கமான ட்விட்டரில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டார், கிட்டத்தட்ட அவர் பதிவிட்ட சில நொடிகளிலேயே அவ்வீடியோ கடும் வைரலாகி சமூக வலைத்தளத்தையே அதிர வைத்தது.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னதாக மீண்டும் சமூக வலைத்தளத்தை அதிர வைத்திருக்கிறார் நடிகர் விஜய், இதுவரை நடிகர் விஜய் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற பக்கங்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது இன்ஸ்டா பக்கமும் திரும்பியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் இன்ஸ்டகிராமில் தனக்கான ஓர் பக்கத்தை உருவாக்கியுள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் தீவிரமாக நடிகர் விஜய்யை ஃபாலோவ் செய்து வந்தனர். மேலும் அவர் இன்ஸ்டா பக்கத்தை தொடங்கிய அரை மணி நேரத்திலேயே லட்சத்தை தாண்டி பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அதுமட்டுமல்லாது இன்ஸ்டா பக்கத்தை தொடர்ந்து லியோ திரைப்பட கெட்டப்பில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு ஹலோ நண்பா நண்பீஸ் என பதிவிட்டது ரசிகர்களை மிகவும் கவர்ந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் ஃபாலோவர்கள் தொட்ட நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வருகைத்தந்த ரசிகர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது 60 லட்சம் பாலோவர்ஸ்களை கொண்டிருக்கிறார், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் என் நெஞ்சில் குடியிருக்கும் ஹேஷ்டேக் வைரலானது போல , இம்முறை #thalapathyoninstagram
என்ற ஹேஷ்டேக் கடும் வைரலாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.