லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்திற்கு பின்னதாக நடித்து வரும் விஜய் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றதால் தளபதி 67 திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட தளபதி 67 திரைப்படத்துக்கான படப்பிடிப்பு, தற்போது காஷ்மீர் வரை சென்றுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜோடு விஜய் உள்பட 150 பேர் கொண்ட படக்குழு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே தளபதி 67 குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிடத் தொடங்கியது, இதில் முதற்கட்டமாக படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து படத்தின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமத்தை சன் டிவியும் , படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக்கும், படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யோடு த்ரிஷா இணைந்து நடிப்பதால், த்ரிஷாவை வரவேற்பதற்காக படக்குழு தனி வீடியோவை எடிட் செய்து வெளியிட்டது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் டைட்டிலை இன்று வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இதனை அறிந்த ரசிகர்கள் நேற்று முதல் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை ஐந்து மணியளவில் சோனி மியூசிக்கில் டைட்டில் வீடியோவை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று மாலை ஐந்து மணியளவில் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது.
இதில் ஆரம்ப கட்டத்தில் விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ போலவே சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே எல்சியூ-ன் கீழ் படம் அமையுமா என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். படத்தின் பெயர் சற்று வித்தியாசமாக லியோ என வைத்திருக்கின்றனர் அதே நேரத்தில் படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது. தளபதி 67 தற்போது லியோ -வாக மாறியிருக்கும் நிலையில் விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தை அதிர வைத்து வருகின்றனர்.