வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீப நாட்களாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தளபதி 67 குறித்த அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அட்லீ விஜய் காம்போவுக்கு மக்கள் கொடுத்து வரும் வரவேற்பை லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று 7ஸ்கிரீன் ஸ்டூடியோ தளபதி67 திரைப்படத்தை தயாரிப்பதாகவும், இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. இதையடுத்து இன்று தளபதி 67 படக்குழுவினர் 150 பேர் கொண்ட குழு தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். இதனிடையே தளபதி 67 படத்தில் இருக்கும் கதாபாத்திர தேர்வுகளை படக்குழு ரகசியமாக வைத்து வந்த நிலையில், இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது.
இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7ஸ்கிரீன் ஸ்டுடியோ திடீரென படத்தின் கதாபாத்திர அப்டேட்டுகளை வெளியிடத் தொடங்கியது. அதில் முதலாவதாக சஞ்சய் தத், பிரியா ஆனந்த் , மிஷ்கின் , சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் , மாதேவ் தாமஸ் , கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் அர்ஜூன் உள்ளிட்டோர் தளபதி 67 ல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இன்றைய அப்டேட்டுகள் முடிவடைந்த நிலையில் மீதமிருக்கும் அப்டேட்டுகளை நாளை வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய நாள் முழுவதும் வெளிவந்த தளபதி 67 அப்டேட்டுகளால் சமூக வலைத்தளமே கலைக்கட்டி வருகிறது.