நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தனது அடுத்த படத்திற்கு கைக்கோர்த்துள்ளார்.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் வெளிவரும் படங்களில் முக்கிய நடிகர்கள் பலர் நடிப்பது வழக்கம், இவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்சேதுபதி , விக்ரம் திரைப்படத்தில் பஹத்பாசில் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர், இதுபோன்ற கதாபாத்திர தேர்வுகள் லோகேஷ் கனராஜ் இயக்கும் படங்களின் சுவாரஸ்யத்தை பெருக்கி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் வகையில் தற்போது வாரிசு படத்தின் வெளியீட்டிற்கு அடுத்த நாளே தளபதி 67 படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. லோகேஷ் கனராஜ் இயக்கி வருவதால் மக்களுக்கு இத்திரைப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் 50 வயதுடைய தாதா கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், அவருக்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது, தற்போது இத்திரைப்படத்தின் கதாபாத்திர தேர்வுகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வருவது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்த ஃபஹத் பாசிலிடம் தளபதி 67 திரைப்படம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளில், உங்களை தளபதி 67 திரைப்படத்தில் எதிர்பார்க்கலாமா என்ற செய்தியாளார்களின் கேள்விக்கு , பஹத் பாசில் தளபதி 67 LCU -ன் கீழ் வருகிறது, ஆகையால் நான் நடிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்திருக்கிறார். விக்ரம் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு தற்போது தளபதி 67-ல் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் வைத்து வருவதோடு , இணையத்திலும் கடும் வைரலாக்கப்பட்டு வருகிறது.