லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது முதல் இருந்தே, ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
7 ஸ்கீரின் ஸ்டியோ தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கு முன் லோகேஷ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் அதிகளவில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தற்போது இக்கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருப்பது மக்களிடையே சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வருகிறது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுமே இதுவரை வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மக்களுக்கும்,சினிமாத்துறையை சார்ந்த அனைவருக்கும் அவர் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது என்றே சொல்லலாம்.
முதலில் தற்காலிகமாக தளபதி 67 என பெயர்வைக்கப்பட்ட நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டுகளும் வெளியானது. அதனை தொடர்ந்து தளபதி 67 என தற்காலிகமாக வைத்திருந்த படத்தின் பெயர் இறுதியாக லியோ என பெயர் சூட்டப்பட்டது. லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யோடு த்ரிஷா, பாலிவுட் சஞ்சய் தத். அர்ஜூன் , கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது காஷ்மீர் வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் படக்குழு அடிக்கடி படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளமான காஷ்மீரில் சக நடிகர்களோடும் நடிகர் விஜய்யோடும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர வைத்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அர்ஜூன் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
அதில் லியோ திரைப்படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற பத்திரிக்கையாளார்களின் கேள்விக்கு நடிகர் அர்ஜூன், இதுவரை லோகேஷ் இயக்கி வெளிவந்த அனைத்து படங்களும் பார்த்திருக்கிறேன் அவர் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதே மகிழ்ச்சியான ஒன்று தான், மிகவும் வித்தியாசமான முறைகளில் கதையை இயக்கக்கூடிய ஒருவர் தான் லோகேஷ், எனக்கு மக்கள் கொடுத்த பட்டம் ஆக்ஷன் கிங், அப்படி இருக்கும் நிலையில் என்னை ரசிகர்கள் மத்தியில் வேற ஒரு ஸ்டைலில் லோகேஷ் காண்பிக்கப் போகிறார் , இதுவரை என்னை மக்கள் பார்க்காத கேரக்டரில் பார்க்க போகிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.