தமிழ்சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் யோகிபாபு.
இதனை தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஓரிரு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகர் பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பொம்மை நாயகி, இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து நடிகர் யோகிபாபு தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் லெட்ஸ் கெட் மேர்ரிட் திரைப்படர்த்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் , நாயகியாக இவானா , நதியா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இத்திரைப்படத்துக்கான பூஜை வேலைகள் முடிவடைந்த நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் லெட்ஸ் கெட் மேர்ரிட் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தனது முதல் படத்தையே தமிழில் தயாரிப்பதால் ரசிகர்களிடையே சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தோனி கிரிக்கெட்டின் பொழுது பயிற்சியில் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை , அவரது கையெழுத்துடன் நடிகர் யோகிபாபுவுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட யோகிபாபு , இதற்காக நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் நடிகர் யோகிபாபு தோனியின் ஆட்டோகிராஃப் உடன் இருக்கும் கிரிக்கெட் பேட்டை வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலான நிலையில் தற்போது இவர் நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கும் வீடியோவும் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
previous post