27.7 C
Tamil Nadu
28 May, 2023
Television

பிக்பாஸ் சீசன் 6:- இனிமே உங்கள வச்சு செய்வேன் – ரச்சிதாவுக்கு சவால் விட்ட அசீம்!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 86 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்தில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 13 பேர் எவிக்‌ஷனில் சென்று 8 பேர் மட்டுமே மீதமுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மணிகண்டன் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே -க்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்வார் எனவும் நாமினேஷனுக்கு செல்ல மாட்டார் எனவும் பிக்பாஸ் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் பல கடுமையான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மைனா மற்றும் அமுதவாணன் இருவரும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இன்றைய நாளில் வெளியான முதல் ப்ரோமோவில் ரச்சித்தாவை அனைவரும் கலாய்ப்பது போன்றும் , இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகே வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் பிடிக்காதது பற்றி மைனாவிடம் கூறுவது போன்று இருந்தது.

See also  ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அடம்பிடித்த ரசிகர்கள் வாக்குறுதி கொடுத்து அனுப்பி வைத்த லதா ரஜினிகாந்த்

இதைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது ப்ரோமோவில் சைக்கிள் ஓட்டுவது போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அசீம் வெளியேற்றப்படுகிறார். இதனால் கோபமடைந்த அவர் ரச்சித்தா மற்றும் ஷிவினை பார்த்து உங்களால் தான் நான் வெளியேறினேன் என்றார். நான் ஒழுங்கா தான் விளையாடினேன் உங்களால் தான் அடுத்த கேம் ல உங்க ரெண்டு பேரையும் வெச்சு செய்யுறேன் என கடும் கோபத்தில் கூறிக்கொண்டே இருக்க ரச்சித்தாவும், ஷிவினும் ஒன்றும் கூற இயலாமல் திகைத்து நின்றனர்.

Related posts