தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிட்டுள்ளனர், மேலும் இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அதனுடன் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. சூர்யா 42 குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து சில நாட்களிலேயே இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் மிகப்பெரிய பான் இண்டியா படமாக உருவாகி வருவதோடு மட்டுமல்லாமல், இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா மட்டுமே கிட்டத்தட்ட 13 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இத்தகவல் வெளியானது முதல் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்து காத்து வருகின்றனர். இத்திரைப்படம் 100 வருடங்களுக்கு முன் நடந்த பல சுவாரஸ்யங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்படம் முழுக்க முழுக்க 3டி முறையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்க் வெளியானது.
இதனிடையே இத்திரைப்படத்தின் அனிமேஷன் காட்சிகளுக்காக சூர்யா 42 படக்குழு பிரம்மாண்ட படக்குழு ஒன்றை தேர்வு செய்துள்ளது, அதாவது அனைவருக்கும் பிடித்தமான அவதார் திரைப்படத்தின அனிமேஷன் காட்சிகளை வடிவமைத்த குழுவே சூர்யா 42 திரைப்படத்தின் அனிமேஷன் காட்சிகளையும் வடிவமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுவரையில் வெளியாகும் இத்திரைப்படத்தின் அப்டேட்டுகள் அனைத்துமே ரசிகர்கள் சற்றும் எதிர்பாராததாக தான் இருந்து வருகிறது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். படம் உருவாவதற்கு முன்னதாகவே வாடிவாசல் திரைப்படம் எப்போது எடுக்கப்பட்டு வெளியாகும் என பல ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர். மேலும் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் குறித்த அப்டேட்டுகளை சமீப நாட்களாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கான பதில் ஒன்றை படக்குழு தெரிவித்திருக்கிறது.
அதில் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் கூடிய விரைவில் அதாவது இரண்டு வாரங்களில் தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது, இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இப்படத்தின் டீசர் மே மாதத்தில் வெளியிடப்பட இருப்பதாகவும் , டீசரை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும் இத்திரைப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட முறையில் உருவாகி வருகிறது என்பதனையும் ரசிகர்கள் அறிந்து கொள்ளாலாம் என படக்குழு தெரிவித்திருக்கிறது. 13 மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது, இதுவரையில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளே பல கோடிகளை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை திஷா பத்தானி நடித்து வருகிறார், மேலும் பல முக்கிய நடிகர்களும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, வாடிவாசல் நடிகர் சூர்யாவின் கெரியரில் எப்படி ஒரு முக்கியப்படமாக அமைய இருக்கிறதோ அதே போன்று சூர்யா 42 திரைப்படமும் அவரது கெரியரில் முக்கியப் படமாக இருக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது சூர்யா 42 டைட்டில் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.