தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா நடிப்பில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்துக்கு சூர்யா 42 என பெயரிட்டுள்ளனர்.
சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்துக்கு பின்னதாக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்த அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்படும் இத்திரைப்படம் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் திஷா பத்தானி, யோகி பாபு , கோவை சரளா , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட முக்கிய பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாந்த் இசையமைக்க உள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நாள் முதல் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . 3 டி முறையில் தயாரிக்கப்படுவதால் ரசிகர்களும் இத்திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இதனிடையே இப்படத்தின் படப்பிடப்பு கோவா மற்றும் பிஜு தீவில் நடைபெற்று வந்த நிலையில் , அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.