தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்தும் “லைசென்ஸ்” என்னும் புதிய படத்தில் அறிமுகமாகிறார் பிரபல மேடை பாடகியான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில். லைசென்ஸ் படத்தின் பூஜை நிறைவடைந்த நிலையில் , படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜெ.ஆர்.ஜி. புரொடக்சன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிக்கும் “லைசென்ஸ்” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார். மெலும் கதையின் நாயகியாக பிரபலமேடை பாடகி ராஜலட்சுமி நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன் பல படங்கள் பாடல்கள் பாடியிருக்கிறார்.
மேலும் கணவன்-மனைவி பாசம், அண்ணன்-தங்கை பாசம், உடன்பிறந்த சகோதரர்களின் பாசம், தாய் – மகள் பாசம் என இவைகளை எடுத்துக்காட்டிட பல திரைப்படங்கள் வந்துள்ளன. இதனிடையில் தந்தை மகள் பாசம் குறித்து வெளியான படங்கள் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. அதன் அடிப்படையில் பாரதி படைத்த புதுமைப்பெண்களின் ஒருவராக ராஜலட்சுமி தந்தையுடன் களத்தில் சாதிக்க இருக்கும் திரைப்படம் தான் லைசென்ஸ் என தாயாரிப்பாளர் ஜீவானந்தம் கூறியிருக்கிறார். மேலும் இந்தக் கதையை குறித்து கணபதி பாலமுருகன் கூறியதும் முதலில் சினிமாவில் அதிகம் ஈர்ப்பு இல்லாமல் இருந்தது, ராஜலட்சுமி நடிக்கிறார் முதல் படம் என்றவுடன் தயாரிக்கலாம் என்றேன் எனவும் தெரியப்படுத்தினார். மேலும் இத்திரைப்படம் சமுதாயத்திடையே நல்ல வரவேற்பை பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
படத்தின் பூஜை வேலைகள் நிறைவடைந்த நிலையில் இந்த மாதம் முதல் இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கி இடைவிடாமல் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இத்திரைப்படத்திற்கு பைஜூ ஜேக்கப் இசையமைக்க , ரமணிகாந்தன் பாடல் எழுத, காசிவிஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரபல முன்னனி எடிட்டரான ஆண்டனியிடம் எடிட்டிங் பயிற்சி பெற்ற பெண் எடிட்டரான வெரோனிகா பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.