தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான, நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் பத்து தல.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டி வரும் நிலையில் , நாளை இத்திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இத்திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு கடந்த சமீப காலமாக தனது தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவும், உடல் பருமன் காரணமாகவும் சினிமாவை விட்டு விலகி இருந்தது அனைவரும் அறிந்ததே, அதன் பின் கடுமையாக பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, மீண்டும் சினிமாவுக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னதாக மீண்டும் நடிக்க வந்த சிம்பு தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனிடையே இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் இவரது கம்பேக்கிற்காகவே எடுக்கப்பட்டது போன்று இருந்தது, மக்களிடையே அதீத வரவேற்பை பெற்ற மாநாடு திரைப்படம் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றியைத் தட்டி சென்றது. இந்த நிலையில் நடிகர் சிம்பு மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்ததே அவரது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும் நிலையில், அவரது படங்களும் தொடர்ந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
மாநாடு திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து , மீண்டும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட இத்திரைப்படமும் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அதன் டீசர் நாளை வெளியாக உள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை போலவே பத்து தல திரைப்படமும் வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், இதனிடையே சிம்புவின் அடுத்த பட அப்டேட் குறித்த மாஸ் தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் உலாவி வருகிறது.
#str48 திரைப்படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும், இதற்கு இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை உலக நாயகனின் RKFI ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பத்து தல திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்தவுடன் #str48 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.