தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை மண்டேலா புகழ் அஷ்வின் இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்து வருகிறார். மேலும் முக்கிய நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். இதனிடையே படத்தின் முதன் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்று வருகிறது. பிப்ரவரி 17 ஆம் தேதி அதாவது சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி மாவீரன் படத்தின் முதல் பாடலான சீன் ஆ சீன் ஆ வெளியானது.
இப்படாலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார், அதுமட்டுமல்லாது ரசிகர்களிடையே இப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்று , நல்ல முறையில் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் மாவீரன் திரைப்படம் குறித்து மற்றுமொரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாவீரன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் , இத்திரைப்படம் அநேகமாக பக்ரீத் திருநாள் அன்று வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் கூடிய விரைவில் திரைப்படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் ரசிகர்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை மாவீரன் படக்குழுவோடு கொண்டாடிய நிலையில் , நேற்று தனது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு சென்றுள்ளார். முதன்முறையாக தனது மகனை வெளியில் அழைத்து சென்றதால் , அதன் புகைப்படங்கள் இணையத்தில் கடும் வைதலாக்கப்பட்டு வருகிறது.