27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் மர்மம்!

மூத்த திரைப்பட பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று உயிரிழந்ததாக தகவல்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வாணி ஜெயராம் இதுவரை திரைப்பட துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் இவருக்கு சமீபத்தில் பத்ம விருதுகளும் வழங்கப்பட்டது. இதனிடையே இன்று நுங்கம் பக்கத்தில் உள்ள இவரது வீட்டில் வாணி ஜெயராம் தனது நெற்றிப் பகுதிகளில் காயங்களுடன் இறந்த நிலையில் உடலை கைப்பற்றினர் போலீசார்.

இதன் பின் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட வாணி ஜெயராமின் உடல், பிரேத பரிசோதனைக்காக  ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட வாணி ஜெயராம் மாடியில் இருந்து விழுந்து விட்டதாக முதற்கட்ட அறிவிப்புகள் வெளியானது.

மேலும் வாணி ஜெயராமின் மரணத்தில் சந்தேகங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவரது வீட்டின் பணிப்பெண் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரியப்படுத்தியுள்ளார். அதில் பாடகி வாணி ஜெயராம் சமீப காலமாகவே வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். மேலும் கடந்த பத்து வருடங்களாகவே நான் தான் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன். இன்றைக்கும் போலவே இன்றைக்கும் வீட்டின் வேலைக்காக வந்தேன். வீட்டின் கதவுகள் திறக்கப்படாத நிலையில் பல முறை வாணி ஜெயராமுக்கு போன் செய்தேன், எதற்கும் பதில் இல்லாத நிலையில் நான் எனது கணவருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வருமாறு கூறியிருந்தேன்.

See also  காட்டுப் பசியில இருக்கேன் - சிம்புவின் வைரலாகும் ட்வீட்!..

தகவல் அறிந்து எனது கணவரும் வந்து கதவை திறக்க முயற்சித்தார். கதவுகள் திறக்கப்படாத நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார் அதில் பத்ம விருதுகளை இவருக்கு வழங்கிய நாள் முதல் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க அடிக்கடி வீட்டிற்கு நிறைய பேர் வரத் தொடங்கினர் என்றார்.

இதனை தொடர்ந்து உடல் நலமும் ஆரோக்கியமாக இருந்ததாக பணிப்பெண் தகவல் தெரிவித்தார். ஆனால் கைப்பற்றப்பட்ட வாணி ஜெயராமின் உடலில் நெற்றிப் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் வாணி ஜெயராமின் மறைவு குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் நிலையில் போலீசார் மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கை சந்தேக வழக்காக மாற்றியுள்ளனர்.

Related posts