நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படத்தை என்.கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து பத்துதல திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் , கவுதம் கார்த்திக் , பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் குறித்த பல அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சிம்புவின் ரசிகர்கள் பத்து தல படத்தின் மீது அதிக எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர்.
சமீப காலமாக சினிமாத்துறை பக்கம் தனது கவனத்தை செலுத்தமால் இருந்து வந்த நடிகர் சிம்பு, நீண்ட நாள் கழித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். இதையடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வந்தார். தற்போது இவர் நடித்து வரும் பத்து தல திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் பத்துதல படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக தகவல் வெளிவந்ததை தொடர்ந்து , படக்குழு தற்போது பத்துதல திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வரும் 2023 மார்ச் மாதம் 30 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.