பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் , அட்லீ இயக்கி வரும் ஜவான் படபிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.
ஜவான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தந்தை ஒருபுறம் தன்னுடைய ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வர்ற தற்போது மகனும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் , கதாநாயகனாக தன்னுடைய முதல் படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருவதாகவும், முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பிரபல நடிகர்களின் வாரிசுகள் படங்களில் அறிமுகமாவது வழக்கமான ஒன்றாகும். இதில் ஷாருக்கானை போல ஆர்யன் கானும் பாலிவுட்டில் வலம் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.