தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வாத்தி. இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார்.
தனுஷின் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் எனவும் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் ஆரவாரமாக எதிர்பார்த்து வந்த வாத்தி திரைப்படம் தற்போது தமிழில் சாட்டை , பசங்க ளுக்கு கிடைத்த வரவேற்போடு நகர்ந்து வருகிறது.
ஆனால் தெலுங்கில் சார் என்ற பெயரோடு வெளியான வாத்தி திரைப்படம் வசூலை வாரி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வெளியான மூன்றே நாளில் கிட்டத்தட்ட 51 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷின் 50 அதாவது D 50 திரைப்படத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
இத்திரைப்படம் குறித்து , அதாவது D 50 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. மீதமுள்ள அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகத நிலையிலும், சில தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், D 50 திரைப்படத்தை தனுஷே இயக்கி நடிக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் போன்றோர் நடிக்க இருப்பதாகவும், அதனோடு நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இணைந்து நடித்த ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும், நடிகை துஷாரா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவையனைத்தையும் விட மிக முக்கியமான தகவலொன்று ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது, அதாவது தனுஷின் அண்ணன்னான இயக்குனர் செல்வராகவன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த நிலையில், முதன் முறையாக தம்பி இயக்க அண்ணன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து பகாசூரன் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் செல்வராகவன், சமீபத்தில் D 50 திரைப்படத்தின் கதையை கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதுமட்டுமல்லாது மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. கதையின் மீது கொண்ட ஆர்வத்தால் தனுஷிடம் நானும் இத்திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன், சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கொரு வாய்ப்பு கொடுக்குமாறு தனுஷிடம் கூறியுள்ளேன், விரைவில் இதன் அறிவிப்புகள் வெளியாகும் நிச்சயம் உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என தெரிவித்திருந்தார். இதனிடையே ரசிகர்கள் பலரும் இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து பார்த்திருப்போம், தற்போது தம்பி இயக்கத்தில் அண்ணன் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் தத்தளித்து வருகின்றனர்.